Skip to main content

வினாடி - வினா நிகழ்ச்சி

        நம் பள்ளியில் முதல் முறையாக அறிவியல் வினாடி-வினா நிகழ்ச்சி சிறப்பான முறையில் 09.03.2020 நடைபெற்றது.

    தேசிய  அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் விதமாக வினாடி-வினா போட்டி அறிவிக்கப்பட்டது.
       
         50 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டி ஒருங்கிணைப்பாளர்களாக அறிவியல் ஆசிரியை திருமதி.இரா. அனிதா அவர்களும், திரு. மு.முத்தழகன், கணித ஆசிரியர் அவர்களும் செயல்பட்டனர்.

     
      6 நிலைகளாக நடந்த இப்போட்டிக்கு தலைமையாசிரியை திருமதி. தி.நளினி அவர்கள் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். ஆங்கில ஆசிரியை திருமதி. க.யோகலட்சுமி அவர்கள் வரவேற்புரையும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.



       வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும்,  சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. 


        
        போட்டி இனிதே நடைபெற உறுதுணையாக இருந்த பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் திரு. மா.பார்த்திபன் ஆசிரியர் நன்றியுரை வழங்கினார்.

           மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்க வினாடி-வினா போட்டி சிறப்பாக முடிவுப்பெற்றது.
🍓🍓🍓🍓🍓🍓🍓🍎🍎🍎
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
பெரியவரிகம், 
திருப்பத்தூர் மாவட்டம். 
🌳🌳🌳🌳🌳🌳🌱🌱🌱🌱🍀🍀