Skip to main content

Posts

Showing posts with the label பள்ளி நிகழ்வுகள்

மாணவர்களுக்குப் பரிசு _ அக்டோபர்

            அக்டோபர் _2025 மாதம் 100% வருகைபுரிந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி மகிழ்விக்கப்பட்டது.       பரிசுகள் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்.

விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் மாணவர்கள்

🌼 சிறப்பு விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் திறமையாளர்கள்..          நம் பள்ளி மாணவர்கள் விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் விதமாக  ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல், பேச்சுத்திறன் வெளிப்படுத்தல் போன்ற திறமைகளை வீட்டிலிருந்தபடியே செய்து மொபைலில் அனுப்பிய பதிவுகளை இங்கே காட்சிப்படுத்துவதில் பெருமைகொள்கிறோம் ..        நம் பள்ளி மாணவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் ஓவியங்கள்  மற்றும் கட்டுரைகள் இப்பக்கத்தில் உள்ளது.  வாழ்த்துக்கள் .. 🌺🌺🌺 <ஓவியம் >                             < கட்டுரை >                         < காணொளி>  

கொரோனா விழிப்புணர்வு போட்டி

      உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஒரு தொற்றுநோய் கிருமி " கொரோனா வைரஸ்" ஆகும்.

வினாடி - வினா நிகழ்ச்சி

        நம்   பள்ளியில் முதல் முறையாக அறிவியல் வினாடி-வினா நிகழ்ச்சி சிறப்பான முறையில் 09.03.2020 நடைபெற்றது.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.02.20

திருக்குறள் அதிகாரம்:கல்வி திருக்குறள்:391 கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

பெரியவரிகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை.

🌹🌹🌹🌹🌹🌹 பெரியவரிகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை.      வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டையில் படம் வரைந்து வேறு அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்பி பரிசு பெற்றுள்ளனர்.

வாழ்த்து அட்டைகள் உருவாக்கிய பள்ளி மாணவர்கள்

சென்னை சிறுதுளி அமைப்பின் சார்பாக ' கனவு மெய்பட வேண்டும் போட்டி-4'  தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்றது. நம் வேலூர் மாவட்டம்,  பெரியவரிகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் சிறப்பாக நடைபெற்றது.  போட்டியில் அனைத்து மாணவர்களும் பங்கு கொண்டனர். இதன் சிறப்பம்சம் அஞ்சல் அட்டைகளை அழகான பொங்கல் மற்றும் குடியரசு தின வாழ்த்து அட்டைகளாக மாற்ற வேண்டும்.  வாழ்த்து அட்டைகள் மற்றொரு பள்ளிக்கு பரிமாறிக் கொள்ள வேண்டும்.. நம் பள்ளி மாணவர்களின் வாழ்த்து அட்டைகள்,  தமிழ்நாட்டில் அல்வா மற்றும் பல சுற்றுலா தலங்கள், ஆன்மீகம் என பலவற்றில் பெயர்பெற்ற திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மடித்தொரை,  ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களை மகிழ்விக்க அனுப்பப்பட்டது.. நன்றி சமர்ப்பணம்... மனங்களில் வாழும் ஆசிரியர் திரு. ஜெயா வெங்கட், சென்னை சிறுதுளி.  ___ பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள். 

கனவு மெய்பட வேண்டும்

நம் மனங்களில் வாழும்  சகோதரர் திரு. ஜெயா வெங்கட், ஆசிரியர் அவர்களின் கனவுகளை நனவாக்க.. அரசு பள்ளி மாணவர்களை மகிழ்விக்கும் *சென்னை சிறுதுளி* யின் கனவு மெய்பட வேண்டும் போட்டி _4. ●மலைகளின் அரசி __ நீலகிரி..மாவட்டத்தின் மடித்தொரை, பள்ளி மாணவர்களின் அழகிய கைவண்ணத்தில்.. >>> எம் பள்ளி மாணவர்களை மகிழ்விக்க .. 🌹🌹  அஞ்சல் அட்டையில் அழகிய பொங்கல் வாழ்த்துக்கள்.. பள்ளியின் சார்பாக.. மனமகிழ்ச்சியுடன்.. ○○○இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ○○○ ஆசிரியர்கள்-மாணவர்கள்.

பசுமை தேசம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு கலாம் கண்ட கனவு மாணவர் விருது

" இளைஞர்களின் எழுச்சி நாயகன்" டாக்டர் A.P.J.அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நம் பள்ளியில் பசுமை தேசம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு திறன் போட்டிகள் 26/10/2018 நடத்தப்பட்டன. 3-4 வகுப்புகள் __ ஓவியப்போட்டி __ மரம் வளர்ப்போம். 5-6 வகுப்புகள் __ கட்டுரைப்போட்டி__ இயற்கையைப் பாதுகாப்போம். 7-8 வகுப்புகள் __ பேச்சுப்போட்டி __ நெகிழி ஒழிப்பு. மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தம் திறன்களை வெளிப்படுத்தினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ( 29/10/2018 ) இன்று " கலாம் கண்ட கனவு மாணவர்" விருது வழங்கப்பட்டது. போட்டிகளில் மாணவர்களின் திறனை வெளிக்கொணர உதவிய ஆசிரியர் ப.சீனிவாசன் அவர்களுக்கு " கலாம் கண்ட கனவு ஆசிரியர் " விருது வழங்கப்பட்டது . போட்டிகள் நடத்தி மாணவர்களின் திறன் வெளிப்பட சிறப்பு காரணமாக இருந்த தலைமையாசிரியர் திருமதி.தி.நளினி அவர்களுக்கு " கலாம் கண்ட கனவு தலைமை ஆசிரியர் " விருது வழங்கப்பட்டது . மேலும் மாணவர்களின் நலனில், தேடலில் நலம் கொண்ட நம் பள்ளிக்கு " கலாம் கண்ட கனவுப்பள்ளி...