ஓவியம் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல. மனதையும், மூளையையும் ஒருங்கிணைக்கும் சிறந்த கலை. மிகவும் நுணுக்கமாக ஓவியம் வரைபவர்கள் பொறுமைசாலிகளாகவும் மற்றும் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள்.
நம் பள்ளி சுட்டிகள் சிறந்த ஓவியர்கள்...
இயற்கையைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக வரைந்தனர். அவர்களின் ஓவியத்திறமையைப் பாராட்டி தி ஆர்ட் அண்ட் பெஸ்ட் சார்பாக பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
T. சாருலதா_வகுப்பு 8,
K.பாலமுருகன் _வகுப்பு 7,
S.சோபிகா _ வகுப்பு 6 , இவர்களுக்குப் பள்ளியின் சார்பாக பரிசுகளும், பாராட்டுகளும்......
S.கீதா_வகுப்பு 8, R.கிஷோர்_வகுப்பு 7, M.சக்திவேல், R. ராகுல், V.தீபா மற்றும் P.யாஷிகா வகுப்பு 6 கலந்துகொண்டனர். அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், பள்ளியின் சார்பாக பரிசுகளும் வழங்கி மகிழ்விக்கப்பட்டது..
பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
மாணவர்களிடம் மொபைலைக் கொடுக்காமல்... காகிதம் மற்றும் பென்சிலைக் கொடுங்கள்...
www.alamaravizhuthugal.net
Comments
Post a Comment